25+ Thirumana(Kalyana) Valthu Kavithaigal

Collection of Wedding Day Wishes in Tamil, Collection of Marriage Wishes in Tamil, Wedding wishes for WhatsApp in Tamil, Wedding wishes for Banner in Tamil, Thirumananaal vaazthukkal, Kalyana Vaazthu kavithaigal, Thirumana(Kalyana) Valthu Kavithaigal

  • Kalyana valthu kavithaigal
  • Happy Wedding day Kavithaigal in Tamil
  • Happy Anniversary Kavithaigal in Tamil
  • Anniversary kavithaigal
  • Wedding Day Kavithaigal
  • Wedding Day wishes for Wife in Tamil
  • Wedding Day wishes for Husband in tamil
  • Tamil Wedding Day wishes
  • Tamil Wedding Anniversary wishes
  • Marriage kavithaigal in tamil


வாழ்த்து கவிதைகள் என்பவை பிறந்தநாள், திருமணம், நட்பு, அன்னையர் தினம், காதலர் தினம், ஆசிரியர் தினம் போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கும், ஒருவருடைய வெற்றிக்கும் வாழ்த்துக்களைப் தெரியப்படுத்தும் கவிதைகள் ஆகும்.

வாழ்த்து கவிதைகளின் வகைகள்:

பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்:
ஒரு நபரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் எழுதப்படும் கவிதைகள் ஆகும்.

திருமண வாழ்த்து கவிதைகள்:
புதிதாய் திருமணம் செய்து கொள்ள போகும் மணமக்களை வாழ்த்தி எழுதப்படும் கவிதைகள் ஆகும்.

நட்பு கவிதைகள்:
நண்பர்களுக்கிடையேயான அன்பு, நட்பு, பாசம், உறவுகளை வெளிப்படுத்த எழுதப்படும் கவிதைகள் ஆகும்.

அன்னையர் தின கவிதைகள்:
அம்மாவின் அன்பு, பாசம், அரவணைப்பு, தியாகம் போன்றவற்றை பாராட்டி எழுதப்படும் கவிதைகள் ஆகும்.

காதலர் தின கவிதைகள்:
காதலர்களுக்கிடையேயான அன்பு, நட்பு, ஊடல், காதலை வெளிப்படுத்த எழுதப்படும் கவிதைகள் ஆகும்.

ஆசிரியர் தின கவிதைகள்: ஆசிரியரின் அன்பு, கண்டிப்பு, தியாகம் போன்றவற்றை பாராட்டி எழுதப்படும் கவிதைகள் ஆகும்.

இப்படி அனைத்து வகையான கவிதைகளையும் இந்த தளத்தில் படித்து மகிழுங்கள்.

25+ Thirumana(Kalyana) Valthu Kavithaigal
25+ Thirumana(Kalyana) Valthu Kavithaigal


யோசனை செய்ய கூடாதே..!

அன்பில் அவன், சேர்த்த இவர்களை,
மனிதரே வாழ்த்துங்கள்..!
வேண்டும் என, இணைத்த இவர்களை,
உறவே வாழ்த்துங்கள்..!

மணமக்களே, ஒருவரை ஒருவர்
உங்கள் வாழ்க்கை துணையாக,
ஏற்றுக்கொள்ளுங்கள்..!
இனிமேல் புயல், வெயில், மழை,
பாலை, சோலை இவை,
ஒன்றாக எதிர்கொள்ளுங்கள்..!

ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

அன்பான குடும்பம்!
அழகான குழந்தை!
அறிவான வாழ்க்கை! என
அன்போடும் அழகோடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்!


இனிய திருமண வாழ்த்துக்கள்!

இன்பம் துன்பம்
இரண்டையும்
இல்லறத்தில் பகிர்ந்து கொண்டு
இல்லை ஒரு துன்பம் என்று
இன்பமாய், வாழ்வின்
இறுதிவரை வாழ்ந்து மகிழ்ந்திடுக!

இனிய திருமண வாழ்த்துக்கள்!

ஆனாலும் காதல் குறையாதது..!

வாலிபங்கள் கூட ஓடலாம்
வயதாகி முதுமை வர கூடலாம்
ஆனாலும் அன்பு குறையாதது..!
இன்பங்கள் கூட ஓடலாம்
துன்பங்கள் வர கூடலாம்
ஆனாலும் காதல் குறையாதது..!

அன்பான குடும்பம்!
அழகான வாழ்க்கை!
அன்போடும் அழகோடும்
அமைத்தாலே பேரின்பமே!

இனிய திருமண நலவாழ்த்துக்கள்!

ஒரு கவிதையின் புலம்பல்..!

வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் தேடி வாசல்வரை வந்து நின்றேன் வார்த்தைப் பஞ்சத்திலே நான்...! காதல் பேசி, கவிகள் பாடி நீவீரோ மஞ்சத்திலே..! யாமோ தமிழன்னையின் தஞ்சத்திலே..! என்றும் உங்கள் நெஞ்சத்திலே..! வாழ்க பல்லாண்டு!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

என்றும் அன்புடன் வாழ்த்துகிறோம்..!

மங்களம் பெருக, மகிழ்ச்சி பொங்க, வாழ்வின் ஒவ்வொரு நொடியும், உங்கள் வாழ்க்கை இன்பமாய் மாற, திருமண பந்தம் என்றும் நிலைத்திருக்க..! என்றும் அன்புடன் வாழ்த்துகிறோம்..!
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..!

திருமண வாழ்த்துக்கள்..!

நிலாவை கரம்பற்றி கனாவை நிறைவேற்றி காதலை கரையேற்றி நிறைவிழா காணும் மணமகனிற்கு வாழ்த்துக்கள்..!
தமிழன்னை மடியில் தவழ்ந்த தலைமகனை தன்மடி தாங்கும் மணமகளுக்கும் வாழ்த்துக்கள்..!
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..!

என்றென்றும் இணைந்தே வாழ்க..!

வாழ்க்கை என்பது காதலும் ஊடலும் ததும்பிய இன்பமும் துன்பமும் நிறைந்த வளைவும் நெளிவும் நிரம்பிய வசந்தப்பாதை..! என்றென்றும் இணைந்தே வாழ்க..!
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..!

மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ..!

தென்றல் காற்றின் சாமர வீச்சில் நிலவின் ஒளி வழித்தடத்தில் இந்த மங்கள நாளில் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறோம்..! இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..!

Post a Comment

0 Comments